டிசம்பர் 4, 2007

சேது பூமி

 

இன்ன பேருந்தில் ஏறி இங்கே இறங்க வேண்டும்,
இன்ன லாட்ஜில் இவ்வளவு ரேட்டில் தங்கலாம்,
இவ்வளவு தூரத்தில் குளம் இருக்கிறது, தீர்த்தம் இருக்கிறது, இன்ன தோஷத்திற்கு இன்ன பரிகாரம் என்பன போன்ற புள்ளி விவரம் தேடி நுழைந்தீர்கள் என்றால், இப்போதே சொல்கிறேன்
ஏமாந்து போவீர்கள்.அன்றியும் இதில் கோவில்களைப் பற்றித்   தெரியாத சேதிகளையும், சாத்திரங்கள் இது வரை பேசாத செய்திகளையும் சிற்ற்றிவுக்கு ஏற்ற வரை அலசியிருக்கிறேன்.

ஆக இது வழிகாட்டி அல்ல, பெருமையை  உணர வைத்து ஆன்மீக உந்துதலை உங்களுக்கு இது ஏற்படுத்துமாயின்  என்முயற்சியில் வென்றவனாவேன்

மரபுக் கவிதைகள், ஆன்மீக்க் கவிதைகள், புதுக் கவிதைகள் சமூகச் சீர்கேட்டுச் சாடல்கள் , ஆன்மீக்க் கட்டுரைகள், இலக்கிய – மொழி ஆராய்ச்சிகள்,  எல்லாவற்றையும் படியுங்கள்.

கடினமாக இருந்தால் அதற்குத் தகுதி ஆக்கிக்  கொண்டு படியுங்கள்.

எல்லாரும் படிக்கிற மாதிரி எழுதுங்களேன் – என்கிறார் அன்பர் ஒருவர்.

சிரித்தேன் நான்,         
அதற்காக நமீதாவைக் கோவில் தெப்பக்குளம்கூட்டி வந்து நீராடிச் சொல்லிப் படத்தோடு சேதியா போட முடியும்.?

எனவே இது ஜனரஞ்சகத் தளம் அல்ல,
ஜனங்களில் யாரோ ஒருவருக்கான தளம்.
அந்த ஒருவர் படித்தால்
ஓராயிரம் பேர் படித்ததாய்
ஆனந்தம் கொள்வேன்
பக்கங்கள் நீங்கள் கிளிக் செய்யக் காத்திருக்கும் போது
நான் எதற்கு இடையில் ?

        -மகுடதீபன் 9486102034
        magudadeepan@rediffmail.com